யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில், கருங்குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் தனது கன்டர் வாகனத்தில் நேற்றைய தினம் (12) விறகு சேகரிக்க சென்றுள்ளார்.
விறகு சேகரிக்க சென்ற இடத்தில் குளவிக் கொட்டிற்கு இலக்காகியுள்ளார்.
உடனடியாக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
எனினும் சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்துள்ளார்.