இலங்கையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்! – மக்களே அவதானம்

ஜனவரி மாதம் இதுவரையான காலப்படுதியில், 5 ஆயிரத்து ,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் 60% வீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

அத்துடன் காலி மற்றும் குருநாகல் பிரதேசங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த செப்டம்பரில் 1,370, ஒக்டோபரில் 2,979, நவம்பரில் 4,561, டிசம்பரில் 8,096 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் மேலும் தெரிவித்துள்ளது.

கொமிஷன் அடிக்கவே அரிசியை இறக்குமதி செய்கிறார்கள்! விவசாயிகள் கூட்டமைப்பு குற்றசாட்டு

Leave a Reply