பெரமுனவின் அருகே கட்சி அலுவலகம்; சந்திரிக்கா திடீர் தீர்மானம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகம் அமைந்துள்ள பத்தரமுல்லையில் தனது கட்சியின் அலுவலகத்தை ஸ்தாபிக்க சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளார்.

17ஆண்டு கால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து பொதுஜன ஐக்கிய முன்னணியை அவர் மீள்உருவாக்கம் செய்ய தீர்மானித்துள்ளார் என்பது பகிரங்கமான விடயம்.

இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் அலுவலகம் திறக்கப்படவுள்ளமை முக்கிய அம்சமாகும்.

இந்த நகர்வில் முன்னாள் ஜனாதிபதியுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இணைந்து செயற்படுவதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரும், சந்திரக்காவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply