மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு அமுலாகும் நடைமுறை!

வவுனியா மாவட்டத்தில் இதுவரையிலான காலமும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகடு, வாகன வருமான உத்தரவு பத்திரம், காப்புறுதி, தலைக்கவசம், சாரதி அனுமதிப்பத்திரம் என்பன தேவையற்றதாக காணப்பட்ட நிலையில் தற்போது குறித்த ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரொஷன் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு இது வரையிலான காலப்பகுதியில் தலைக்கவசம் உட்பட மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தேவையின்றி காணப்பட்டது.

இனிவரும் காலங்களில் இலக்கத்தகடு, வாகன வருமான உத்தரவு பத்திரம், காப்புறுதி , தலைக்கவசம், சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதனை மீறிச் செயற்படும் மின்சார மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் வவுனியா பல இடங்களில் பரவலாகக் குறித்த மின்சார மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் முகவர்கள் எவ்வித ஆவணங்கள், தலைக்கவசம் என்பன தேவையில்லை என மக்களை ஏமாற்றி விற்பனை மேற்கொள்ளப்படுகின்றது. எனவே மக்கள் அவதானமாகச் செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வலயங்களிலும் மீன் பிடியில் ஈடுபடலாம்! டக்ளஸ்

Leave a Reply