யாழில் விஷமருந்தி உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.

அதன்படி, விஷமருந்தி உயிரிழந்த குறித்த குடும்பஸ்தர், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

எனினும் , அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், 33 வயதுடைய ப.நிரோஜன் என்ற குடும்பஸ்தர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவருடைய உயிரிழப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *