கடலில் நீராடச்சென்ற மூன்று சிறுமிகள் மாயம்: வெலிகமையில் சம்பவம்!

மாத்தறை – வெலிகம பகுதியில் கடலில் நீராடச்சென்ற ஐந்து சிறுமிகளில் மூவர் இன்று முற்பகல் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் காணாமல் போயுள்ள சிறுமிகளை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply