கிளிநொச்சியில் திடீரென வீழ்ந்து நபர் உயிரிழப்பு: அச்சத்தில் மக்கள்!

கிளிநொச்சியில் சற்று முன்னர் பிரதேச சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை கிளிநொச்சியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அத்தோடு கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது மதிக்கத் தக்க விஜயகுமார் என்ற வெளிக்களத் தொழிலாளியே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த சம்பவம் கிளிநொச்சி நகரில் திருநகர் வீதியில் அரச நில அளவைத் திணைக்களத்துக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் சுகாதாரத்தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சாதாரணமாக பணிக்கு வந்தவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *