
நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நாட்டை முழுமையாக முடக்குவது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது பேசிய அவர், நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என்று கூறியுள்ளார்.
இதேவேளை, கொரோனா ஒழிப்பு செயலணி உள்ளிட்ட சில தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், எனினும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.