அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி கிண்ணியாவில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை பின் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது
இக் கையெழுத்தினை அகிலங்கை மக்கள் காங்ரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தியினால் முன்னெடுக்கப்பட்டன.
நாடு முழுவதும் சுமார் ஓர் இலட்சம் கையெழுத்தினை மக்களிடமிருந்து பெற்று பாராளுமன்ற உப்பினர் றிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பும் நோக்கில் இன்று கிண்ணியாவிலும் கையெழுத்து பெறப்பட்டது
அகிலங்கை மக்கள் காங்ரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி கூறும் போது,
கெளரவ றிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு 198 நாட்கள் கடந்து செல்கின்றன. ஜனநாயகக் கட்சியின் தலைவர், சிறுபான்மைக் கட்சியின் தலைவர் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்ட போதிலும் எதிலும் அவர் குற்றவாளி என நிருபிக்கப்படவில்லை
நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைக்கின்ற ஜனநாயகக் கட்சியின் தலைவர் அவர் ஒரு முஸ்லிம் எந்தவொரு துரோகமும் செய்ய மாட்டார். அவர் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்
அவர் குடும்பமும் கஸ்டத்தின் விளிம்பில் இருந்து கொணடு இருக்கிறது அவரை விடுதலை செய்யக் கோரியே நாடள ரீதியிலே ஓர் இலட்சம் கையைழுத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம்
ஆகவே ஜனாதிபதியும், பிரதமரும் அவருக்கு மன்னிப்பு வழங்கி கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறினார்
முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களை தயவு செய்து ஜனாதிபதி அவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்
எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாததனால் அவர் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி, மற்றும் பிரதமரிடம் கேட்டுக் கொள்கின்றேன்