தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் ஆக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
நான்கு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
அத்துடன் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை 12 ஆயிரம் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும்.
தற்போது காணப்படும் பயணக் கட்டுப்பாடுகளுடன், செப்டெம்பர் மாதத்திற்குள் நாளாந்தம் 6 ஆயிரம் பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படலாம்.
ஒக்டோபர் மாதத்திற்குள் 226 பேர் நாளாந்தம் கொரோனா தொற்றால் மரணிக்கலாம்.
ஒக்டோபர் முதல் வாரத்திற்குள், நாளாந்தம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 275 ஆக அதிகரிக்கக்கூடும்.
கடந்த மே – ஜூன் மாதங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் நாள்தோறும் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை ஆயிரம் பேர் வரை குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.