திருகோணமலை – சேருநுவர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து கடைகளையும் இரண்டு வாரங்கள் மூடுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் கொரோனா அனர்த்தத்தில் இந்தப் பிரதேசத்தை பாதுகாக்கும் பொருட்டும் சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடனும் இன்றிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வரையும் அனைத்துக் கடைகளையும் மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக சேருநுவர வர்த்தக சங்க தலைவர் சந்தருவன் தெரிவித்தார்.
இதேவேளை, திருகோணமலையில் குறைந்து காணப்பட்ட கொரோனா தற்போது அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
