செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பொது இடங்களில் நடமாடும்போது இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நடைமுறை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும்.