முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடன் தொடர்பை பேணிய அனைவரையும் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.