இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 400 ஐ கடந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெல்டா வைரஸ் மற்றும் சரும நோய்களும் தலை தூக்கியுள்ளதோடு,சிறுவர்களும் நோய்த் தொற்றுக்குள்ளாகி அவஸ்தைப்படுகின்றனர்.
அத்துடன், இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் அதிகமாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டோர் இடத்தில் பெரியவர்களுடன் சிறுவர்களையும் சேர்த்து ஒரே விடுதியில் வைத்துள்ள காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குறித்த சிறுவன் தனது பாட புத்தகத்தோட தனிமைப்படுத்தலில் இருப்பது போன்ற புகைப்படத்தை முகநூலில் சமூக ஆர்வலர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக கல்முனை பிராந்தியத்தில் கூட இந்த நிலையே காணப்படுகிறது.
எனவே, கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு என தனியான கொரோனா ஆரம்ப பராமரிப்பு சிகிச்சை நிலையங்களை ஏற்படுத்துமாறு அல்லது சிறுவர்களை தத்தமது வீடுகளில் வைத்து தனிமைப்படுத்தி பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது