இலங்கையில் சிறுநீரக நோயாளிகளை அதிகம் பாதிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள சிறுநீரக நோயாளிகளின் உயிர் ஆபத்தில் இருப்பதாக IDH மருத்துவமனையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

மேலும் சிறுநீரக நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். இதனால் அவர்கள் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என கூறப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுநீரக நோயாளிகள்தான் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

ஆகவே சிறுநீரக நோயாளிகள் கொவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதன் மூலம் மரணத்தை கட்டுப்படுத்தலாம் என்றும்,அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *