மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் குளத்தில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு, கிரான் பிரதேசதிலுள்ள பெண்டுகள்சேனை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை வயல் வேளாண்மையில் ஈடுபட்டோர் துரத்தியபோது மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் தப்பி ஓடுவதற்காக குளத்தில் குதித்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய குலேந்திரன் இந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் பெண்டுகள்சேன, பூலாக்காடு பகுதியிலுள்ள வயல் பகுதியில் மண் ஏற்றச் சென்றபோது வயல் பகுதியில் நின்றோர் மண் ஏற்றியவர்களை துரத்தியபோது குறித்த இளைஞன் அங்கிருந்து தப்புவதற்காக ஓடிச் சென்று அருகிலுள்ள ஆளமான ஆற்றில் குதித்துள்ளார்.
அத்தோடு ஆற்றில் குதித்தவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது