வீட்டில் பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தலில் – குருக்களுக்கு வழக்கு தாக்கல்

மட்டு பலாச்சோலையில்  வீடு ஒன்றில் விசேட பூஜை வழிபாட்டில் கலந்துகொண்ட 18 தனிமைபடுத்தல்; வீட்டின் உரிமையாளர் குருக்கல் ஆகிய இருவருக்கு வழக்கு தாக்குதல் 

(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை  பலாச்சோலையில் வீடு ஒன்றி இன்று வெள்ளிக்கிழமை (13) சுகாதார துறையினரின் அனுமதியின்றி பெருமளவான மக்கள் பங்கேற்புடன் வைரவருக்கான விசேடபூஜை வழிபாடு இடம்பெற்ற வீட்டை பொதுசுகாதார பரிசோதகர்கள் பொலிசார் முற்றுகையிட்ட நிலையில் பலர் தப்பியோடிய நிலையில்  18 பேரை தனிமைப்படுத்தி உள்ளதுடன் வீட்டின் உரிமையாளர். குருக்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்க பெற்ற தகவலையடுத்து வந்தாறுமூலை பலாச்சோலை பகுதியில் சம்பவதினமான இன்று வீடு ஒன்றில் சுகாதார துறையினரிடம் எந்தவிதமான அனுமதியையும் பெறாமல் வைரவருக்குhன விசேட பூஜை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டு அந்த பூஜை வழிபாட்டில் 65 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுட்டிருந்தனர்.
இந்த நிலையில்; பொலிசாரின் உதவியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் அந்த விபாட்டு இடத்தை முற்றுகையிட்டதையடுத்து அங்கிருந்து பலர் தப்பி ஓடிய நிலையில்; 18 பேரை பொலிசார் தடுத்துவைத்து அவர்களின் தரவுகள் பதியப்பட்டு அவர்களை பொது சுகாதார பரிசோதகர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தியதுடன் பூஜை வழிபாட்டை ஏற்பாடு செய்த வீட்டின் உரிமையாளர் குருக்கள்; ஆகிய இருவருக்கும் எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த  பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மாரியம்மன் ஆலைய உற்றவத்தில் கலந்து கொண்ட 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *