
கல்முனை காணி காரியாலயம் மீண்டும் பூட்டு!

கல்முனை காணிப்பதிவு காரியாலயத்தில் பணி புரியும் இரண்டு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத்தால் எதிர்வரும் 26.08.2021 வரை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பும் இவ்வாறு பூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எதர்வரும் 26 ஆம் திகதிவரை மக்கள் கல்முனை காணிப்பிரிவு காரியாலயத்தில் சேவைகளை பெறமுடியாது இருக்கும் என மேலதீக காணி பதிவு அதிகாரி சிவதர்ஷன் தெரிவித்தார்.