பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 34 ஓட்டங்கள் முன்னிலையில் மே. தீவுகள்!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம், நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் ஜோசுவா டி சில்வா 20 ஓட்டங்களுடனும் ஜோமேல் வொரிக்கான் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி, 34 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

ஜமைக்காவில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 217 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அலாம் 56 ஓட்டங்களையும் பஷீம் அஷ்ரப் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரோச் 2 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ஓட்டங்களை பெற்றது.

கெய்ரன் பவல் மற்றும் போனர் ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர். கிரைஜ் பிரத்வெயிட் 97 ஓட்டங்களுடனும் ரொஸ்டன் சேஸ் 21 ஓட்டங்களுடனும் ஜெரமைன் பிளக்வுட் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

கெய்ல் மேயர்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஜேஸன் ஹோல்டர் 58 ஓட்டங்களுடனும் கெமார் ரோச் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் அப்பாஸ் 3 விக்கெட்டுகளையும், ஷாயின் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும், பஷீம் அஷ்ரப் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 2 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், இன்று போட்டியின் மூன்றாவது நாளில், மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *