இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு – பொலிஸ்

முகக்கவசம் அணியாதோர் தொடர்பாக இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இதற்கமைய பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பாக அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும்அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் முகக்கவசம் சரியான முறையில் அணியாமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எனவே வீட்டிலிருந்து வெளியேறும் பொழுது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வெளியேறுமாறு அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply