வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சுவரொட்டி!

வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினரான குணசிறி என்பவருக்கு எதிரான சுவரொட்டி அவரது ஊரில் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் அவரை, “சங்கானை கொரோனா குணசிறி” என்று விழித்து, “ஊர் மக்களை காட்டிக்கொடுத்து பிள்ளைக்கும் சுயநலவாதி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இதுவரை என்ன செய்தீர்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதனை ஒட்டியவர்கள் “தவறான செயற்பாடுகளை கண்டனம் செய்யும் அமைப்பினர்” என்ற பெயரில் உரிமை கோரப்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply