சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 17 இல் இருந்து 18 ஆக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போத தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
17 வயதிற்கு உட்பட்டவர்கள் சிறுவர்களாகவே கருதப்படுகின்றனர்.
அவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் சிக்கல் நிலை உள்ளது.
இந்த காரணிகளை கருத்திற் கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 18 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


