யாழில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கினால் சட்ட நடவடிக்கை: அரச அதிபர் அதிரடி

யாழ். மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யாது பதுக்கி வைத்திருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் யாழில் உள்ள சில வர்த்தகர்களால் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவ்வாறு பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

தமக்கு பழக்கமானவர்களுக்கு மாத்திரம் எரிவாயுவினை மறைமுகமாக வழங்குவதாகவும் ஏனையோருக்கு இல்லை என திருப்பி அனுப்புவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இன்றைய தினம் (14) யாழ். மாவட்டத்தில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்கள் அனைத்தும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் எரிவாயு பதுக்கி வைக்கும் உரிமையாளர்களின் பெயர் விபரங்கள் அனைத்தும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இன்றைய தினத்திலிருந்து சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

Leave a Reply