வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஆலய மகோற்சவம் எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நேற்றைய தினம் (13) வெள்ளிக்கிழமை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் முடிவில், இவ்வருடம் மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபையினர், ஆலய நிர்வாகம், திருவிழா உபயகாரர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று ன்றைய தினம் (14) சனிக்கிழமை ஆலய வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலின் முடிவில், ஆலய மகோற்சவத்தை அடுத்த வருடம் மாசி மாதம் வரும் பூரணை மகத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.