யாழ்ப்பாணம், திருநெல்வேலி – பாற்பண்ணை பகுதியில் புதிய கட்டடம் ஒன்றில் மின்னிணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் நேற்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குருநகர் பகுதியை சேர்ந்த கோபு விஜித் (வயது-17) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
குறித்த சிறுவன் தனியார் கட்டட ஒப்பந்த காரரர் ஒருவரின் கீழ் வேலைக்கு சேர்ந்து புதிய கட்டடத்தில் மின் இணைப்பு வேலைகளில் நேற்று முன்தினம் (12) ஈடுபட்டுள்ளார்.
நள்ளிரவு வேளை குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவனுக்கு 17 வயது என்பதால் சிறுவனை வேலைக்கு அமர்த்தியது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிறுவனின் பெற்றோரிடமும் வாக்குமூலம் பெற்றுள்ள பொலிஸார், இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.