நாடு பூராகவும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் யாழ். மாவட்ட மக்களுக்கு கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஊட்டும் முகமாக யாழ். நகரப்பகுதியில் இன்றைய தினம் (14) இராணுவத்தினரால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தின் 512 ஆவது பிரிகேட் படையினரால் குறித்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
