
நாட்டின் தற்போதைய நிலைமையில் தினமும் இடம்பெறும் கொரோனா மரணங்கள் 250ஐ கடந்து சென்றிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
அத்துடன் தினமும் 5000ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் கிடைத்திருப்பதாக அந்த சங்கத்தின் உதவிச் செயலாளரான மருத்துவர் நவின் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த எண்ணிக்கையானது, வரும் வாரங்களில் இரட்டிப்பாகலாம் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
Advertisement
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றும் மரணமும் அதிகரித்துவரும் நிலையில் பலரும் நாட்டைமுடக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.