ஒட்சிசன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவிடம் இருந்து வாராந்தம் ஒட்சிசன் சிலிண்டர்களை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும், ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவிக்கையில்,
வாராந்தம் 100 மெட்ரிக் டன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்துவதற்காகவே இந்தியாவிடமிருந்து ஒட்சிசன் கொள்வனவு செய்யப்படுகிறது.
குறித்த கொள்வனவு நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படுவதுடன், தேவை பூர்த்தியாகும் வரை கொள்வனவு முன்னெடுக்கப்படவுள்ளது.
சுகாதார ஒழுங்கு விதிகளை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி நாளை மறுதினம் (16) திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது என்றார்.