செஞ்சோலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சினால் 54 மாணவர்கள், 7 பணியாளர்கள் உட்பட 61 தமிழ் உறவுகள் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த படுகொலை சம்பவத்தின் 15 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றைய தினம் (14) அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.




