யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்டம் பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் சில இன்று (14) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலேயே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்களில் கைக்குண்டு, மிதிவெடி என்பன அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இவை மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.