ஆலய தீ மிதிப்பு உற்சவத்தில் கலந்து கொண்ட 30 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு, வாகரை – ஊரியன் கட்டு பேச்சியம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு உற்சவ வழிபாட்டில் கலந்து கொண்ட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி உற்சவமான தீ மிதிப்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

குறித்த உற்சவத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் வழமைக்கு மாறான நிலையில் நோய் வாய்ப்பட்டுள்ளனர்.

அவர்களில் 13 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து இன்று (14) சனிக்கிழமை மேலும் 65 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாகரை பிரதேசத்தில் முதற் தடவையாக அதிகளவு எண்ணிக்கையானோர் கொரோனா நோய் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

Leave a Reply