மேலும் 160 கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் (13) 160 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக்கத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த மரணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் ஒரே நாளில் அதிகளவானோர் உயிரிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply