சைனோஃபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் லுனாவ வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொவிட் தடுப்பூசி செலுத்தும் போது வழங்கப்படும் அட்டையை தயாரிப்பதற்காக பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த சந்தேக நபர் மொரட்டுவ காவல்நிலையத்தில ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று -14- நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Advertisement
இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


