நாட்டில் மேலும் 822 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.
இதற்கமைய இன்றைய தினம் (14) இதுவரையில் 3 ஆயிரத்து 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 51 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 3 இலட்சத்து 7 ஆயிரத்து 345 பேர் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் (13) 160 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததுடன், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


