கிளிநொச்சியில் மேலும் 43 பேருக்குக் கொரோனா

கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் அதனை அண்மித்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 43 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

196 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான அன்டிஜன் பரிசோதனையிலேயே இவ்வாறு 43 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அண்மைய நாட்களாக கிளிநொச்சியில் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply