யாழில் விபத்து: இளம்பெண் உயிரிழப்பு

கோப்பாயில் இன்று (15) இடம்பெற்ற விபத்தொன்றில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதியை, பின்னாலிருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் யுவதி சம்பவ இடத்தியேலயே உயிரிழந்ததுடன், அவரது கணவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply