இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழில் முன்னெடுப்பு

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை இடம்பெற்றது.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத்தூதுவரால் இந்தியத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனுடன், யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கும் பங்குபற்றியிருந்தார்.

Leave a Reply