தலைநகரிலும் தலிபான்கள்: காபூலில் பதற்றம் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு தலிபான்கள் தங்கள் போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

வெளியேற விரும்பும் எவருக்கும் பாதுகாப்பான வழியைக் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என தலிபான் தலைவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர் காபூலின் புறநகர்ப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்துள்ளமையினால், காபூலில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதேவேளை தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply