<!–
சென்னை- ஜார்ஜ் கோட்டையில் 75ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.
குறித்த விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்துக்கு வருகை தந்த முதலமைச்சர், மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். இதன்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


