பொலிஸ் உத்தியோகத்தராக தன்னை அடையாளப்படுத்தி பணம், நகை கொள்ளையிட்டவர் கைது: யாழில் சம்பவம்

பொலிஸ் உத்தியோகத்தராக தன்னை அடையாளப்படுத்தி சூட்சுமமான முறையில் நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்த நபர யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். நகரப்பகுதி, நாவற்குழி, அரியாலை, மானிப்பாய் போன்ற இடங்களில் தனிமையில் நடமாடும் வயோதிபர்கள் மற்றும் பெண்களை குறி வைத்தே குறித்த சந்தேகநபர் கொள்ளையிட்டுள்ளார்.

அவர்களிடம் சென்று தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என தன்னை அறிமுகப்படுத்தி பேச்சு கொடுத்து அவர்களின் உடமையில் இருக்கும் நகை, பணம் தொலைபேசி என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

குறித்த நபர் கடந்த 2 வாரங்களில் 6 இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

யாழ். பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ். நாவற்குழி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 2 தங்கச் சங்கிலி 17 ஆயிரம் ரூபாய் பணம் உடபட மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த கொள்ளைச் சம்பவங்களிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளையிடப்பட்ட பொருட்களை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply