கிளிநொச்சி பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தின் போது ரிப்பர் வாகனம் ஒன்று குடை சாய்ந்துள்ளது.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனையிரவு பகுதியில் யாழ் நோக்கி பயணித்த கப்ரக வாகனத்தின் மீது கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இதன் போது ரிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது. இதன் போது சாரதி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
Advertisement
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


