திருமண நிகழ்வுகள், ஒன்று கூடல்களுக்கு அனுமதியில்லை: வெளியானது புதிய அறிவிப்பு

நாளை மறுதினம் (17) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல், வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று (15) நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்பட மாட்டாது.

சிற்றுண்டிச்சாலைகளில், ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோரை விடவும் அதிகமானோர் ஒன்றுகூட முடியாது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply