இ.போ.ச ஊழியர்கள் 285 பேருக்கு கொரோனா

இலங்கை போக்குவரத்து சபையின் 285 ஊழியர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றுடன் இனங்காணப்பட்டவர்கள் வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆபத்தில் இருப்பதால், நாளை (16) முதல் புதிய ஒழுங்குமுறையின் கீழ், ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

அதன்படி, சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட சபை ஊழியர்களையும் இரண்டு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை வேலைக்கு அழைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி தேவையான பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துமாறு அனைத்து டிப்போ அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply