தமிழ் மக்களின் காணியை அபகரிக்கும் சதித்திட்டம்..!

தற்போதைய காலகட்டத்திலும் சரி நல்லாட்சி காலகட்டத்திலும் சரி காணி அபகரிப்பு அதிகரித்தே செல்கின்றது.

கொரோனாவை பயன்படுத்தி இராணுவ நில அளவையாளர்கள் மூலம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக பல தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் 3குடும்பங்களுக்கு உரித்தன 4 ஏக்கர்
காணியை அபகரிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது.

அக்குடும்பங்களுக்கு உரித்தான காணியை 16வது காலாட்படையின் தேவைக்காவே காணி அபகரிப்பு இடம்பெறுகின்றது என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த 4 ஏக்கர்காணியை நாளை திங்கட்கிழமை 8.30மணிக்கு நிலஅளவீடு செய்யப்படவுள்ளது என எமது செய்திப்பிரிவிற்கிற்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த நில அளவீடு 5 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply