நாடுமுழுவதும் நாளை திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதனை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாளை முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்தத் தீர்மானம் தாக்கம் செலுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


