
நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை இன்று (15) அறிவித்துள்ளார்.

