மட்டக்களப்பு தேவாலய திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டிருந்த அருட்தந்தை உட்பட பலருக்கு கொரோனா!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தேவாலயம் ஒன்றில் கடந்த தினத்தில் இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டிருந்த அருட்தந்தை உட்பட எண்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் இத்தகவலை தெரிவித்தார்.

மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் திருத்தலத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் கலந்துகொண்ட அருட்தந்தையர் உட்பட எண்மரே கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

Advertisement

இதன் காரணமாக குறித்த திருவிழாவில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply