ஒரு கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரத்து 308 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதவர்களில் 45 இலட்சத்து 27 ஆயிரத்து 502 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

குறிப்பாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 27 ஆயிரத்து 16 பேருக்கு சீசினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 83 ஆயிரத்து 518 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், நேற்று 2 ஆயிரத்து 204 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 409  பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

மேலும் 61 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 4 ஆயிரத்து 697 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

Leave a Reply