வத்தி குச்சி இல்லாமலே காதல் தீயை பத்த வைப்பா… பிங்க் நிற புடவையில் ஜனனி வெளியிட்ட கியூட் வீடியோ.! SamugamMedia

பிக்பாஸில் கலந்து கொண்டு பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து வரும் ஜனனி, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறார்.


அந்த வகையில் அவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 


பிக்பாஸில் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர்களை பங்கெடுக்க வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது விஜய் தொலைக்காட்சி. 


அந்த வகையில் சீசன் மூன்றில் லாஸ்லியா, தர்ஷனும், சீசன் ஐந்தில் மதுமிதா என்பவரையும் சீசன் ஆறில் ஜனனி என்பவரையும் களம் இருந்தது. 


ஜனனி இலங்கையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கி வந்தார்.


மேலும் உணவகத்திற்கு சென்று அங்கு உணவுகளை ருசி பார்த்து அந்த உணவு பற்றி விளக்கும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார் இந்த வீடியோக்களின் மூலமாக ஜனனிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்த பிரபலத்தைக் கொண்டு அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 6ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார் ஜனனி. 


ஆரம்பத்தில் மிக நன்றாக விளையாடி வந்தார். குறிப்பாக பொம்மை டாஸ்க்கில் தனலெட்சுமியுடன் சேர்ந்து தீவிரமாக விளையாடினார்.


பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவர் விளையாடுவதில் சுணக்கம் காட்டினார். அமுதவாணனுடன் சேர்ந்து அவர் விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. 


மேலும் தனலக்ஷ்மி, அமுதவாணன், ஆயிஷா என்று அவர் நண்பர்களுடனே நேரத்தை பெருமளவில் செலவழித்து வந்தார். இதனால் அவர் வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்ஸால் பலமுறை நாமினேட் செய்யப்பட்டார். 


இருந்தபோதிலும் ஜனனியை மக்கள் காப்பாற்றியே வந்தனர். ஜனனி பேசும் அழகான தமிழுக்காகவே பலரும் ஜனனிக்கு ரசிகர்களாக இருந்து வந்தனர். இதனால் ஜனனி எப்போது நாமினேஷன் வந்தாலும் காப்பாற்றப்பட்டு கொண்டே வந்தார்.


இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஜனனியை பிக்பாஸில் இருந்து வெளியேற்றினர். 


தற்போது வெளியே வந்த பின்பு சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜனனி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 


அதேபோல் தற்போது பிங்க் நிற புடவையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.



Leave a Reply