ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவிற்கு 75 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம்) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டன.
கனடாவில் வாழ்ந்த, புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த அமரர் செல்லமுத்து குணரெட்ணத்தின் நினைவாக அவரது குடும்பத்தினரின் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மூலமும், சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலனின் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி ஊடாகவும் குறித்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதம மருத்துவர் யோ. யதுநந்தனனின் வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
குறித்த உதவி வழங்கும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான கருணாகரன் குணாளன், ராகுலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.


